பிரபல நாட்டில் தனது இரு பிள்ளைகளை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடா நாட்டில் அமைந்துள்ள கியூபெக் மாகாணத்தில் இரு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவவழியை சேர்ந்த நபர் மீது வழக்கு பதிவு பட்டது. இந்நிலையில் இவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாக அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் annie charpentier என்பவர் கூறியதாவது. உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் மூத்த சகோதரி தான் இந்த கொடூர சம்பவத்தை அதிகாரிகளிடம் கூறினார்.
நான் வேலை முடிந்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் இளம்பெண் என்னை நாடி வந்து 911 இல்லத்திற்கு தொடர்பு கொள்ள உதவும் படி கேட்டதாகவும் இறுதியில் தமது போனில் இருந்து நடந்த சம்பவத்தை அவர் அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி போலீசார் அவர்களது வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த நிலையில் இருந்த 11 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் அவர்களது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தன்னை மொத்தமாக உலுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.