தெற்கு போஸ்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதப்படும் பகுதியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்கிரேட், ஜாக்ரெப் மற்றும் ஸ்கோப்ஜே வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்பேனியா மற்றும் தெற்கு இத்தாலியிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories