ஜப்பான் நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள இஷிகவா என்ற மாகாணத்தில் சுசு நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 19ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
இதனை அடுத்து தொடர்ந்து நில சரிவு ஏற்பட்டால் பொருட்கள் சேதமாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் ஹோகுரிகு ஷின்கான்சென் புல்லட் ரெயில்கள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருகின்றது என ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஷிகா அணு உலையும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.