இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனருக்கும் இடையே பல ஆண்டுகள் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கூரை மற்றும் காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் உள்ள பேருந்தில் நேற்று பயணம் கொண்டிருந்தபோது இஸ்ரேலியர் மீது அதே பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பாலஸ்தீனியரின் தாக்குதல் நடத்தினார்.
அதாவது தான் மறைத்து வைத்திருந்த ‘ஸ்குரு டிரைவர்’ கொண்டு இஸ்ரேலியர் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் 40 வயது நபர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த பேருந்தில் இருந்த மற்றொரு இஸ்ரேலியர் தான் வைத்திருந்த துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்திய பாலஸ்தீனரை சுட்டார். இந்த துப்பாக்கி சுட்டில் காயம் அடைந்த பாலஸ்தீனியர் உயிரிழந்தார். மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த இஸ்ரேலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.