திருநங்கைகளுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் 10,418 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அந்நாட்டின் ஊடகங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இதனால் அவர்கள் அச்சுறுத்துதழில் வாழ்கின்றனர். செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 திருநங்கைகள் மற்றும் அவர்களது ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த மாதம் ஒன்றாம் தேதி மஜித் உள்ளிட்ட 2 திருநங்கைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த கொடூரமான தாக்குதல் மற்றும் கொலைகளை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளது.