ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை வெளியிட்டு வந்த ஸ்டாண்ட் நியூஸ் எனப்படும் இணையதளம் முடக்கப்பட்டது.
ஹாங்காங்கின் ஸ்டாண்ட் நியூஸ் இணையதளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனியும் இதனை நடத்த முடியாது எனவும், நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளது. முன்னதாக இந்நிறுவனத்தின் ஆசிரியர்கள் 6 பேர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனநாயக கருத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வந்த ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதால் தொடர்ந்து இந்த நிறுவனமும் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.