Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் கனமழை வெள்ளத்தால் 13 பேர் பலி… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் பலூசிதான், பஞ்சாப், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஜி கான் சாகிவால் மற்றும் ஜாம்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன் தினம் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அங்குள்ள சுலைமான் மலைத்தொடரில் கொட்டிதீர்த்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தேரா காஜி கான் மாவட்டத்தில் சோட்டி ஜைரீன் என்ற இடத்தில் வெள்ளத்தில் அடுத்த செல்லப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அதனை போல சாஹிவால் மாவட்டம் ஆரிப்வாலா நகரில் பருத்தி சேகரிக்கும் தொழிலாளர்கள் தங்கி இருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் பலியாகிணர். மேலும் 2 சிறுமிகள், 6 பெண்கள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதற்கிடையில் பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான தரைவழி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிரமப்பட்டு வருகின்ற நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |