அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் முனி ஃபாரஸ்ட் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்த போது சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பிரான்சிஸ்கோ காவல்துறை தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் ஒருவர் மற்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.