ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்கத்தில் 280 தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக நிலக்கரிச் சுரங்கத்திற்கு விரைந்து இடர்பாடுகளில் சிக்கியிருந்த 239 பேரை மீட்டு எடுத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே இடர்பாடுகளில் சிக்கி காணாமல் போன 40 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.