இன்று காலை இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவாகி இருந்ததாக இந்தோனேசியாவின் வானிலை பருவகாலம் மற்றும் புவிஇயற்பியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே இந்தோனேஷியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு சுமத்ரா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.