நேற்று இரவு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மானாய் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 51 கி.மீ தூரத்தில் மானாய் நகரின் தென்கிழக்கு திசையில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பூமியின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.