மேற்கு லண்டனை எல் ஷஃபீ எல்ஷேக்(34) சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத குழுவுடன் இணைந்து கைதிகளை படுகொலை செய்வது, சித்திரவதைக்கு உட்படுத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது, பணயக் கைதிகளை சிறைபிடிப்பது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு எட்டு குற்றசாட்டுகளுக்கு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்ஜீனியா அமெரிக்காவில் தீர்ப்பு அளித்த போது, உணர்ச்சியற்ற காணப்பட்ட எல் ஷஃபீ எல்ஷேக் தீர்ப்பை வாசித்தவரை மட்டும் பார்த்தபடி காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ராஜ் பரேக் என்பவர் கூறியது, நமது நாட்டின் வரலாற்றிலும் நமது நீதி அமைப்பிலும் இது குறிப்பிட்டதக்க அத்தியாயமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து எல் ஷஃபீ எல்ஷேக் உள்ளிட்ட குழுவால் படுகொலை செய்யப்பட்டவர்களின் முக்கியமான நபர் அமெரிக்க ஊடகவியலரான ஜேம்ஸ் ஃபோலி ஆவர். இவரது தாயார் டயான் ஃபொலே கூறியது, ஐஎஸ் பயங்கரவாத குழுவின் ஒரு பகுதியாக இருந்த போது நீங்கள் செய்த கொடூரமான மனித உரிமை குற்றங்களை இந்த விசாரணை நடத்தியுள்ளது. மேலும் சமூகத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த வெறுப்பு உங்கள் மனிதநேயத்தை முந்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்துஎல் ஷஃபீ எல்ஷேக் உள்ளிட்ட நான்கு பிரித்தானியர்கள் இணைந்து ஐஎஸ் குழுவால் மொத்த 27 பயணகைதிகள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு எல் ஷஃபீ எல்ஷேக் மற்றும் கோட்டே ஆகிய இருவரும் துருக்கிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, அமெரிக்கா ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயக படைகள் கைது செய்தனர். அமெரிக்க பயணக்கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக கோட்டே ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனை சேர்ந்த டேவிட் துருக்கியல் இங்கிலாந்து நாடு கடத்தப்பட்ட பிறகு ஆகஸ்ட் 10 ஆம் தேதி புதன்கிழமை லூடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நால்வர் குழுவில் முக்கியமானவர் என கருதப்படும் ஜிஹாதி கடந்த 2015 ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.