வடகொரியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழித்து விட்டதாக சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு 4 பேருக்கு புதிதாக காய்ச்சல் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு தரப்பு பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், காச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண ப்ளூ காச்சல் தான் என்றும் கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வடகொரியாவில் புதிய அளவிலான காய்ச்சல் பரிசோதனை மையங்கள் இல்லாதது காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஊரடங்கை விலக்கி கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.