பிரபல நாட்டில் லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோகேஷ் என்ற நரம்பியல் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனைக்கு முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வரும் மக்களிடமிருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அவருக்கு 63 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.