Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு….!! 20 பேர் பலியான சோகம்….!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாக மாற்றப்பட்டன. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தற்போது வரை ஆண்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று காலை மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப்பள்ளியில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தலிபான் படைகள் சுற்று வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |