பிரபல நாட்டில் முக்கிய எம்.பி. தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான எம்.பி. சர் கவின் ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரசு ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும், எம்.பி. சர் கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். மேலும் அந்த கறையை துடைப்பதே என்னுடைய நோக்கம். இந்த குற்றச்சாட்டுகள் முழுவதும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நற் செயல்களில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி. மேலும் தனது ராஜினாமாவிற்காக எந்த ஒரு பணி நீக்க ஊதியமும் நான் பெறவில்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகுவது உண்மையில் மிகவும் வருத்தம். ஆனால் பிரதமர் தன்னுடைய முழு ஆதரவும் பின் இருக்கையில் இருந்து முழு மனதுடன் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சர் கவின் வில்லியம்சனின் ராஜினாமாவை மிகப்பெரிய வருத்தத்துடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக் தனிப்பட்ட ஆதரவிற்கும், விசுவாசத்திற்கும் சர் கவின் வில்லியம்சனுக்கு நன்றி தெரிவித்தார்.மேலும் அடுத்தடுத்து கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் உங்களுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாது என குறிப்பிட்டார்.