குழந்தைக்கு ஆசிட் தண்ணீரை கொடுத்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் பகுதியில் போயெட் ரெஸ்டாரன்ட் எந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முஹம்மது என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துள்ளனர். அதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் எடுத்து தனது கைகளை கழுவியுள்ளார். இதனையடுத்து உடனே அவர் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்துள்ளார்.
மேலும் இன்னொரு பாட்டிலை எடுத்து அவர்களது குடும்பத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை குடித்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் விசாரணை செய்ததில் அந்த தண்ணீர் பாட்டிலில் இருந்தது ஆசிட் தண்ணீர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கூறியதாவது. அந்த ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்கள் என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல் மேலாளர் முகமது ஜாவேத் என்பவரை கைது செய்துள்ளோம். இந்நிலையில் விசாரணை முடியும் வரை ஓட்டல் மூடப்படும் என கூறியுள்ளனர்.