பிரேசிலில் பரானா மாகாணத்தில் இடதுசாரி காட்சி நிர்வாகி Marcelo Arruda பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திடீரென புகுந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் இரு தரப்பினர் இடையே நடந்த சரமாரி தாக்குதலில் Marcelo Arruda சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து குண்டடி காயங்களுடன் துப்பாக்கி சூடு நடத்தியவரை மீட்கப்பட்டனர். அதன் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் சிறை காவலர் என்றும் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் வலதுசாரி ஆதரவாளர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற சிசிடிவி வெளியாகி உள்ளது.