Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பீரங்கி குண்டுகள் முழங்க…ரமலான் நோன்பு நிறைவு…. கண்டுகளித்த மக்கள்…!!!!

பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் பாரம்பரிய நிகழ்வானது பஹ்ரைனில் நடைபெற்றது.

பஹ்ரைனில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளானது படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் பாரம்பரிய நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வை காண ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து கண்டுகளித்துள்ளனர்.

இந்நிலையில் கடிகாரங்கள் மற்றும் செல்போன்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு முன்பே, பீரங்கி குண்டுகள் முழக்கத்தின் மூலம் இந்த ரமலான் நோன்பு நேரம் நிறைவடைந்ததை மக்கள் தெரிந்து கொண்டனர். மேலும் 15 ஆம் நூற்றாண்டில் இந்த பழக்கமானது எகிப்தில் தோன்றி, பின்னர் பல வளைகுடா நாடுகளுக்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |