துபாயின் திறக்கப்பட்டிருக்கும் ஹிந்து கோயிலை பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தர்பார் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலில் பிராதன கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் மேற்பகுதிகள் மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப்பூ வரையப்பட்டுள்ளது. இந்த கோவில் அதிகாரப்பூர்வமாக தசரா தினமாக அக்டோபர் 5ஆம் தேதி தான் திறக்கப்பட போது என்ற போதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிர்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்டம்பர் 1ஆம் தேதியை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதாக கூறப்படுகின்றது. இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் கியூ. ஆர். குறியீடு முன்பதிவு நடைமுறை அடிப்படையில்
மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த கோயில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இந்த கோயிலில் தரிசனம் செய்ய அக்டோபர் மாத இறுதி வரை வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு முழுமையாக ஏற்கனவே முடிந்து விட்டது அக்டோபர் மாதத்திற்கு பிறகு எந்தவித கட்டுப்பாடு இன்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தற்போதைய நிலையில் கோயிலில் 14 பண்டிதர்கள் மூலமாக வேத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டு வருகின்றன. இவர்கள் 14 பேரும் பிரத்யேகமாக இந்தியாவில் இருந்து வரவேற்கப்பட்டு தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இவர்கள் காலை 7:30 மணி முதல் 11 மணி வரையிலும் பின்னர் 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோயிலில் பூஜை செய்கின்றனர்.