இங்கிலாந்து பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளை கண்ணீரில் தள்ளி உள்ளது. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் கூறியதாவது,”எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நான் அவர்களுக்கு தந்தை என்ற நிலையில் இருந்து என்னால் இதனை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வழங்குவதற்கு என நிறைய இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது மிகக் கொடிய செயல் ஆகும். மேலும் தலீபான்களின் இந்த செயலை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.