காங்கோ நாட்டில் எபோலா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில் கடந்த 2018- 2020 ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிர எபோலா பாதிப்பு காரணமாக 23 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கடந்த அக்டோபர் டிசம்பர் மாதங்களில் அந்நாட்டின் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட எபோலா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது இந்நிலையில் தற்போது மீண்டும் நாட்டின் வடமேற்கு பகுதியில் புதிதாக எபோலா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
காங்கோவில் ஈகுவடீர் மாகாணத்தின் 31 வயது ஆண் ஒருவருக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் கடந்த 5 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் சேர்ந்த அன்றே உயிரிழந்துள்ளார். இந்த நோயை கட்டுப் படுத்துவதற்காக தடுப்பு ஊசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.