இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து லிட்ரோ சிலிண்டரின் விலையை ரூபாய் 200 ஆக உயர்த்த வேண்டிய சூழ்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 50 மட்டும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்குள் கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 140 இடங்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் சிலிண்டர்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.