சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளது. ஷாங்காயில் இரண்டு மாதத்திற்குப் பின் வாகனங்கள் இயக்கப்படுவதுடன் துறைமுகங்களும் செயல்பட தொடங்கி இருப்பதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் சவுதி அரேபியாவும், ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் அதிகரித்துள்ளது.
Categories