மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. இதனையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூகி போராட்டம் நடத்தினார். அப்போது இவர் உட்படப் பலரை ராணுவம் வீட்டுக் காவலில் அடைத்து வைத்தது. இந்நிலையில் ஆங் கான் சான் சூ கி-யின் தேசிய ஜனநாயகம் முன்னணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பியோ ஸெயா தா, ஜனநாயக செயற்பாட்டாளர் கியாவ் மின் யு, ஹியா மயோ ஆங், ஆங் துராஜா ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய,கொரில்லா தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் இவர்கள் மீது இருந்தன என்று அரசு பத்திரிக்கையான மீரர் டெய்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ராணுவ அரசு உறுதிப்படுத்தியது. ஆனால் இவர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இவர்கள் நான்கு பேருக்கும் பொதுமனிப்பு அளிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியது. மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மியான்மர் நாட்டு சட்டப்படி மரண தண்டனைக்கு அரசின் தலைவர் ஒப்புதல் அளிப்பது அவசியம். மேலும் அரசியல் கைதிகள் 4 பேர் தூக்கிலிடப்பட்டதற்கு பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.