இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆக்ஸ்போர்ட் நகரில் பிரம்மாண்டமான சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜிங் ஸ்டேஷன் 395 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இது மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50 மெகாவாட் ஹைபிரிட் பேட்டரியும் நிறுவப்பட்டுள்ளது.