போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர்.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது. கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் போலீசார் தாக்கியதில் தான் அந்த பெண் உயிரிழந்ததாக கூறி நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹிஜாப்பை கழற்றி வீசியும், அதனை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதுவரை போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். அதேபோல் நேற்று
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பினோச் வினோத் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.