அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உயிர் இழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இது பற்றி கெண்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறியது, கெண்டகி, டென்னசி மற்றும் மேற்கு வீர்ஜினியா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சமீப நாட்களில் வான் மற்றும் நீர் வலியை நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 கவுண்டி பகுதியில் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் திடீரென மின்வினியோகம் பாதிப்பு ஏற்பட்டதில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலாக வீடுகளுக்கு மின்சார கிடைக்கவில்லை. என்றால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கவுன்டி பகுதிகளில் வெள்ளநீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டு விட்டது. வெள்ளப் பாதிப்பினால் சிலர் வீட்டின் மேற்கொறையில் தஞ்சமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வெள்ளப்பெருக்கு ஒரு பேரிடர் என அறிவித்துள்ளார். கெண்டகியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்