Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… இத்தனை வருடம் சிறைத்தண்டனையா….? வியப்பில் மக்கள்…!!!!!

பிரபல நாட்டில் குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதித்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிராவீஸ் எட்வர்ட் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை ஆரஞ்சு கவுண்டிங்  பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் ஆபாச படங்கள் தயாரிக்க அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார்.

இதனை கேட்டு  அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.  இந்த தீர்ப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |