உலக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கி உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஐரோப்பிய மருந்து கட்டுப்பாடு ஆணையம் மற்றும் ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரானின் மாறுபாடின் திரிபு பிஏ 5 அதிக அளவில் பரவி வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60க்கும் மேற்பட்டவர்கள் 4 வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.