தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுருங்கப்பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரை சுற்றியுள்ள கியாங்கி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ. அதிகமாக கனமழை பெய்தது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு 144.5 மி.மீ. மழை பொழிவை தாண்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை தலைநகர் பகுதியில் 300 மி.மீ. வரை அதிக மழை பொழியும் என்று கொரியா வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜியோங்கியில் 350 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனையடுத்து இந்த கனமழையின் காரணமாக சீயோலில் 5 பேர், கியாங்கியில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் தலைநகரில் 4 பேர், மாகாணத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர். ஜியோங்கில் 9 பேர் காயம் அடைந்தனர். தலைநகர் பகுதியில் உள்ள 17 குடும்பங்களை சேர்ந்த 173 பேர் தங்கள் வீடுகளை இழந்து பள்ளிகள் மற்றும் முகாம்களை தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையில் ரயில் பாதை வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில ரயில்வே மற்றும் சுரங்க பாதை பிரிவுகளை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரியா வன சேவை நாடு முழுவதும் உள்ள 47 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலசரிவு ஆலோசனைகளை வழங்கியது. இதில் சீயோலில் உள்ள 9 மாவட்டங்கள், இஞ்சியோனின், வடக்கு மற்றும் தெற்கு சுங்சியோங் மாகாணங்கள் ஆகும்.