அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் ரூபர்ட் முர்டாக்(91). இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இங்கிலாந்தின் தீ சன், தி டைம்ஸ் ஊடகங்களின் அதிபராக இருக்கின்றார். இவர் நடிகை ஜெர்ரி ஹாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் 2014ஆம் வருடம் லண்டனில் நடைபெற்றது. அப்போது ரூபர்ட் முர்டோக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் நான் உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி மிக மகிழ்ச்சிகரமான நபர் இனி ட்விட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 6 வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பெரிய போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொடங்கி இதுதான் இப்போது பேசு பொருளாக உள்ளது. நடிகை ஹால் ஏற்கனவே ஜாகர் என்பவருடன் நீண்டநாள் உறவில் இருந்து 4 குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளார். இந்தோனேஷியாவில் திருமணத்தில் இணைந்த ஜோடி ஏறத்தாழ 10 வருடங்களுக்கு பின் லண்டன் கோர்ட்டில் விவாகரத்து பெற்று பிரிந்தது. இந்த நிலையில் ரூபர்ட் முர்டோக்கை பொருத்தமட்டில் ஆஸ்திரேலிய விமானப் பணிப்பெண் பேட்ரிசியா புக்கர், ஸ்காட்லாந்து பத்திரிகையாளர் அண்ணா மான், சீன தொழிலதிபர் வெண்டி டெங் என மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்டவர். மேலும் அவர்கள் மூலமாக 10 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.