சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பின் நீண்ட கால ஆலோசராக இருந்த அல்ஜப்ரி, சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் “எம்பிஎஸ்” என்று அழைக்கப்படும் முகமது-பின்-சல்மான் குறித்து பரபரப்பு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அல்ஜப்ரி கூறியது, எம்பிஎஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள ‘புலிப்படை’ என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். எம்பிஎஸ் தனது மக்களுக்கும், அமெரிக்கரர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார். எம்பிபிஎஸ் ஒரு மன நோயாளி, பச்சாதாவம் இல்லாதவர், உணர்ச்சிகளை உணர மாட்டார். அவருடைய அனுபவத்திலிருந்து ஒருபோதும் பாடங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை.
இந்த கொலையாளி செய்த அட்டூழியங்களையும், குற்றங்களையும் நாங்கள் கண்ணால் பார்த்து இருக்கிறோம். அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார் இளவரசன் முகம்மது பின் நயீப். அதற்கு பிறகு அல்ஜப்ரி தனது உயிருக்கு பயந்து, பின்னர் நாட்டை விட்டு வெளியேறி கடனாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் இப்போது தலைமுறைவாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய அல்ஜிப்ரி, “சவுதி அரசாங்கம் மற்றும் அந்நாட்டின் அரசு குடும்பத்தை பற்றி முக்கியமான தகவல்களை நான் தெரிந்து வைத்திருப்பதால், அணுகுவதால், ஒரு நாள் இளவரசர் முகம்மது-பின்-சல்மானால் கொல்லப்படுவேன்” என்று கூறினார். இந்நிலையில் அவருடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்காவில் உள்ள சவுதி தூதராக, அல்ஜப்ரியை “ஒரு மதிப்பிழந்த முன்னாள் அரசு அதிகாரி என்றும் அவர் செய்த நிதி குற்றங்களை மறைப்பதற்காகவே இது போன்ற கதைகளை உருவாக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோபேட்டர் சவுதிக்கு வருகை தர உள்ளார்.