பிரித்தானிய மகாராணியும் மற்றும் தங்கள் பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் அருகில் வாழ்வதற்காக, இளவரசர் வில்லியம் குடும்பமானது, இதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விட்டுவிட்டு, விண்ட்சரில் உள்ள ஒரு வீட்டுக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த வீட்டின் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது. அதாவது இளவரசர் ஹரியைப் போல், விவாகரத்தான அமெரிக்கப் பெண், ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் தனது ராஜ பதவியை இழந்த ஒருவரது வீடு அது எனவும்,மேலும் வேல்ஸ் இளவரசராக இருந்தவரான எட்டாம் எட்வர்ட் அந்த வீட்டில்தான் வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளவரசர், Wallis Simpson என்னும் விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மணம் முடிப்பதில் பிடிவாதமாக இருந்ததால், மன்னராக பதவியேற்று 11 மாதங்களே ஆன நிலையில், தன் பதவியைத் துறக்கவேண்டியநிலை உருவாகியுள்ளது.
இதை தொடர்ந்து, மகாராணியாரின் அருகில் இருப்பதற்காக, இளவரசர் வில்லியம் குடும்பம் அந்த மாளிகைக்கு குடிபெயர உள்ளதாகவும் மற்றும் வில்லியம் கேட் தம்பதி பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் சமீபத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இதற்கிடையில், இளவரசர் ஆண்ட்ரூ பருவம் எய்தாத இளம்பெண் ஒருவருடன் பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதால், மகாராணியாருடன் அதிக நேரம் செலவிடுவதாலேயே, மகாராணியாருக்கு அருகில் தாங்கள் இருப்பதற்காக வில்லியம் தம்பதியர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.