கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறை முழுவதும் பரவியது.
இதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.