Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ராணுவ வீரர்களுக்கு…. பயிற்சியளிக்க இந்தியா உறுதி… தகவல் வெளியிட்ட இந்திய தூதரகம்….!!!!

இலங்கை நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும் என்று இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளார். 

இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதர் கோபால் பாக்லே கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என உறுதிபட கூறியுள்ளார்.

இந்தியா தனது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் அடிப்படையில் திறன் மேம்பாட்டில் இலங்கைக்கு உதவ உறுதியளித்துள்ளது. சவாலான காலங்களிலும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா பயிற்சி வழங்கி இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |