பிரபல நிறுவனமான realme நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இந்த ரியல்மி 9i 5ஜி வருகிற 18-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட உள்ளது. இதில் மீடியாடெக் டிமெண்ட்சிட்டி 810 ப்ராசசர் வழங்கப்படுகிறது.
realme நிறுவனம் புதிய 5g போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3 கேமரா சென்சார்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது என்பது உறுதியானது. மேலும் FHD+LCD ஸ்க்ரீன், 5000 mAh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.