ரஷ்ய நாட்டின் அதிபர் புதினின் நெருக்கமான உதவியாளர் அலெக்சாண்டர். இவருடைய மகள் டார்யா டுகினா பிரபலமான பத்திரிக்கையாளராக இருந்தார். இவர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்து கொண்டு வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் குண்டு வெடித்ததில் டார்யா உடல் சிதறி பலியானார். இவருடைய கொலைக்கு பின்னால் உக்கிரன் தான் இருப்பதாக ரஷ்யா உளவுத்துறை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி டார்யா வீட்டின் அருகில் வாடகைக்கு குடி வந்து பல நாட்களாக திட்டமிட்டு டார்யாவை கொலை செய்ததாக உளவுத்துறை கூறுகிறது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ரஷ்யாவில் நடந்த குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். மேலும் டார்யா கொலைக்கு காரணம் உள்நாட்டு மோதல் என்றும், ரஷ்யா கற்பனை உலகில் வாழ்வதால் எங்கள் மீது கவனம் செலுத்துகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.