ஜகன்மோகினி திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஜே கே சாரதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 83.விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ஜகன்மோகினி. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சாரதி. இவர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் தனது 83 வயதில் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
Categories