பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் .
பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
சம்பவத்தன்று இரவு அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அவர், வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் தான் எங்கும் தொலைந்து போகவில்லை என பல்லவி சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.