பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
சம்பவத்தன்று இரவு அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அவர், வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரைப் ஏற்றுக்கொண்ட போலீசார் , அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.