Categories
உலக செய்திகள்

“பிரபல பாடகர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்!”.. புகார் அளித்த பெண்ணிற்கு சிறை தண்டனை.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

பாகிஸ்தானில் பாடகி ஒருவர் பிரபல பாப் பாடகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கே சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  

பாகிஸ்தானில் கடந்த 2017ம் வருடத்தில் மீசா சாஃபி என்ற 39 வயதுடைய பாடகி, அலி ஸஃபார் என்ற பிரபல பாப் பாடகர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் இவரின் இந்த புகார் பாகிஸ்தானின் #Me Too இயக்கத்தை செயல்பட வைத்துள்ளது. மேலும் மீஷாவிற்கு பிறகு எட்டு பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

அதன்பின்பு மீசா தன் வழக்கை பாகிஸ்தானின் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் நீதிமன்றம் அவர் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணியாற்றினார் என்றும், ஒரு நிறுவனத்திற்காக தான் பணியாற்றி இருக்கிறாரே தவிர அலி ஸஃபாரிற்காக  பணியாற்றவில்லை எனவே பணியாற்றும் இடத்தில் நடந்த துன்புறுத்தல் விதிகளுக்கு இவர் பொறுப்பாக மாட்டார் என்று தீர்ப்பளித்து விட்டது.

இதற்கிடையில் அலி ஸஃபார் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என்று மீசா மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததோடு, இழப்பீடு தொகையாக 6 மில்லியன் டாலர்கள் வழங்குமாறு கோரியுள்ளார். மேலும் மீசாவின் இந்த குற்றச்சாட்டால் தனக்கு சர்வதேச ஸ்பான்சர் மற்றும் இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது என்று அலி குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும் தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கும் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட இழப்புகள் திருப்பி தர முடியாததாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மீசாவிற்கு  மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  மீசாவின் ஆதரவாளர்கள், மீசாவின் இந்த நிலை இனிமேல் இது போன்ற பெண்கள் புகார்கள் அளிக்க முன்வரமாட்டர்கள் என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |