பிரபல பாடகர் ஜூபின் நாட்டியல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் அவரது கை மற்றும் விலா பகுதியில் முறிவு ஏற்பட்டது. தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது கையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அந்த கையை இனி பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ராதன் லம்பியான், லுட் கயே, ஹம்னாவா மேரே உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்களை பாடியவர் ஜூபின்
சமீபத்தில் அவர் துபாயில் ஒரு பெரிய கான்செட் நடத்தி இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அடுத்து வரும் பண்டிகை கால சீசனுக்கு நல்ல தொடக்கம் என்று பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் தான் விபத்தில் சிக்கியுள்ளார்.