மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில், மறைந்த பாடகர் விசெண்டே பெர்னாண்டஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காதல் மற்றும் காதல் தோல்வி பாடல்கள் மெக்சிகோ மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகப் பிரபலமடைந்த பெர்னாண்டஸ் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை கலக்கி வந்தவர்.
இந்த நிலையில், அவருடைய வீட்டில் தவறி கீழே விழுந்து முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் நீண்டநாட்களாக அவதியுற்று வந்த பெர்னாண்டஸ் நேற்று உயிரிழந்துள்ளார். 81 வயதுடைய மெக்சிகன் பாரம்பரிய இசையில் அவர் பாடிய பாடல்கள் இறுதி அஞ்சலியில் இடைவிடாது இசைக்கப்பட்டன.