பிரபல மூத்த பின்னணி பாடகி சித்ராவுடன் சீரியல் நடிகை ரித்திகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CUSvMp5BC-W/
தற்போது இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பிரபல மூத்த பின்னணி பாடகி சித்ராவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரித்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற சூப்பர் சிங்கர்-8 பைனல் நிகழ்ச்சியில் ரித்திகா கலந்து கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.