Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல பாடகி காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் (71). உடல்நல குறைவால் அவர் காலமானார். இதனை அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியாவின் அசாமில் கடந்த 1950-ம் ஆண்டு பிறந்தவர் நூர். இதன்பின்னர், 1950-ம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து சென்றார். மெல்லிசையில் தீவிர ஆர்வம் கொண்ட நூர் மிக இளம் வயதில் இசையை கற்க தொடங்கினார். அவர், 1968-ம் ஆண்டு ரேடியோ பாகிஸ்தானில் முதன்முறையாக பாட தொடங்கினார். இவரது மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |