பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் ஜனவரி 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா . இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் . இவர் பல திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 19 வயதிலேயே திருமணம் நடைபெற்ற இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் . கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்.
சமீபத்தில் இவர்இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது . ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்த சுனிதா பின்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொழிலதிபர் ராம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இவர்கள் திருமணம் டிசம்பர் 27-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருந்தது. இதையடுத்து இவர்கள் திருமணம் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போனது . தற்போது இவர்களின் திருமணம் ஜனவரி 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.