Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணம் செய்து கொள்ளக்கூறி வற்புறுத்தல்” பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை…. வெளியான பகீர் தகவல்….!!!!

பிரபல பாடலாசிரியரின் மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த தில் திரைப்படத்தில் இடம்பெற்ற உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் கபிலன். இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு தூரிகை (28) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரைகள் எழுதி வந்ததோடு, பீயிங் விமன் என்ற இணைய இதழையும் நடத்தி வந்துள்ளார். அதோடு திரைப்படங்களில் ஆடை வடிவமைப் பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தூரிகை சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூரிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், தூரிகையின் மரணம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |