Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் இசை பாடகர் மர்ம மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தம்பா என்னும் பகுதியில் ஆர்டன் காட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தனது 9 வயதில் 1997 ஆம் வருடம் முதன்முதலாக ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின் பேக்ஸ் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்னும் பாப் இசை குழு உடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றியுள்ளார். இதில் அந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக்காட்டர் உறுப்பினராக இருந்திருக்கின்றார். இந்த சூழலில் வேலி விஸ்டா ட்ரைவ் என்னும் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஆரன் சந்தேகத்திற்குரிய விதமாக மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இதனை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி பகுதியின் ஷெரிப் அலுவலகம் உறுதி செய்து இருக்கிறது. இதனை அடுத்து ஆரனுக்கு கடந்த காலங்களில் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஒரு வயதில் பிரிண்ட் என்ற மகள் இருக்கின்றார். போதை பயன்பாடு போன்றவற்றிற்காக ஆரன் மற்றும் அவரது முன்னாள் மனைவியான மெலானி மார்ட்டின் போன்றோர் தங்களது மகளை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தனது வீட்டில் ஆரன்  சந்தேகமான முறையில் மரணம் அடைந்திருப்பது பற்றி காட்டரின் குடும்பத்தினர் விரைவில் அறிக்கை வெளியிட இருக்கின்றனர். இதனைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |