Categories
உலக செய்திகள்

பிரபல பாப் பாடகர் திடீர் மரணம்…. வெளியான தகவல்…. பெரும் சோகம்…..!!!!!

பிரபல பாப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான தர்சம் சிங் சைனி (54) சென்ற சில ஆண்டுகளாக குடலிறக்க நோயால் சிரமப்பட்டு வந்தார். இதனையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் தர்சம் சிங் சைனி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தர்சம் சிங் சைனி மரணமடைந்தார். இவரது திடீர் மறைவு ஹாலிவுட் மற்றும் இசையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்ற 2 வருடங்களுக்கு முன் தர்சம் சிங் சைனிக்கு ஹெர்னியா(குடலிறக்கம்) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதன்பின் கடந்த மார்ச் மாதம் கோமாவிலிருந்து மீண்ட அவரது உடல்நிலை படிபடியாக முன்னேறி வந்தது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டுமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது பாலிவுட் பாடகர் பாலி சாகூ வெளியிட்டுள்ள பதிவில், “சகோதரர் தர்சம் சிங் சைனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் திடீர் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |